உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 2026 சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு

2026 சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு

கிருஷ்ணகிரி: 2026 சட்டசபை தேர்தலுக்காக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின், 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையம் அமையவுள்ள அரசு பாலிடெக்னிக்கில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி ஓட்டு எண்ணும் மையத்தில், சட்டசபை தொகுதி வாரியாக பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைக்க, பாதுகாப்பு வைப்பறை, ஓட்டுகள் எண்ணும் அறைகள், ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தப்படும் எழுது பொருட்கள், தளவாடங்களுக்கான வைப்பறை, ஓட்டு எண்ணும் முகவர்களுக்கான இடம் மற்றும் பாதுகாப்புகள் தடுப்புகள் ஆகியவை ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், அமைக்கும் பணிகள் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகமது ஷபீர் ஆலம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை