உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சீரான மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சீரான மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் கிராம ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தி துறை அரசு முதன்மை செயலர், பீலா வெங்கடேசன் பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக, நகர்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர், சீரான மின்சாரம் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.வெப்பத்தினால் ஏற்படும் அம்மை பெரியம்மை, தட்டம்மை மஞ்சள் காமாலை போன்ற நோய்களிலிருந்து பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, அதிகளவு நீர் சத்துள்ள பழங்கள், மோர், அரிசி கஞ்சி, இளநீர், பானகம், மோர் கலந்த கூழ், எலுமிச்சை ஜூஸ், வெள்ளரி பிஞ்சி, நுங்கு மற்றும் காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள ஓ.ஆர்.எஸ்., திரவம் குடிநீர் கலவை, தண்ணீர் பந்தல் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். பின் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மேற்பார்வைபொறியாளர் அலுவலக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும், 94987 94987 என்ற மின்னக மொபைல் எண் மூலம், மின் நுகர்வோர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், அவற்றின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை