| ADDED : ஜூன் 29, 2024 02:53 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தில், கெலவரப்பள்ளி பஞ்.,ல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் மூலம், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, நுண்ணுாட்டச்சத்து இடுவதன் நன்மைகள், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்ட பயன்கள் குறித்து விளக்கினார். அதியமான் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய வேளாண்மை உதவி போராசிரியர் ராசுகுமார், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் முக்கியத்துவம், உர நிர்வாகத்தில் பெற வேண்டிய லாபம், இயற்கை வேளாண்மையின் நன்மை, பஞ்சகாவியா உரம் தயாரித்தல் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.ஓசூர் வேளாண்மை அலுவலர் ரேணுகா, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் பூர்ணிமா, துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி, பஞ்., தலைவர் புட்டாரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.