| ADDED : ஜூலை 07, 2024 05:57 AM
போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட குள்ளனுார் பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் ஐந்-துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவ-மனை, அரசு பள்ளிகள், சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, குள்ளனுார் குடியிருப்பு பகுதியில் உள்ள, 200க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளி-யேறும் கழிவுநீர், மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் தேங்கி வருகி-றது. இதை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் அவதிக்குள்-ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், பஞ்., நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இநிலையில் நேற்று, சாலையோரம் கழிவு நீர் தேங்காமல் இருக்கும் வகையில், கால்வாய் அமைக்கும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி கூறுகையில்,'' கழிவுநீர் சாலையில் தேங்காமல் இருக்கும் வகையில், சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.