உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்டத்திலுள்ள 1,720 பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

மாவட்டத்திலுள்ள 1,720 பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 1,720 பள்ளிகளுக்கு அரசின் பாட புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், 1,720 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்படும் என, அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பாடநுால் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி துவங்கியுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 605 அரசு துவக்கப்பள்ளிகள், 146 நடுநிலைப்பள்ளிகள் என, 751 பள்ளிகளும், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 540 துவக்கப்பள்ளிகள், 157 நடுநிலைப்பள்ளிகள் என, 697 பள்ளிகள் என மொத்தம், 1,720 பள்ளிகளில், 2.19 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு இந்த கல்வியாண்டிற்கு வழங்க வேண்டிய இலவச பாடப்புத்கங்கள், கிருஷ்ணகிரி சி.இ.ஓ., அலுவலகத்தில் இருந்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும், 31க்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகம் வழங்கப்பட்டு விடும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ