உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்

டூவீலர் நிறுத்தும் இடமாக மாறிய காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சுற்றிலும் உள்ள, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிருஷ்ணகிரி, பெங்களூரு, சென்னை, தர்மபுரி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்ல காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். அதன்படி, கிராமத்தில் இருந்து டூவீலரில் வரும் பொதுமக்கள், வாகனங்களுக்கான ஸ்டாண்டில் டூவீலர் மற்றும் கார்களை நிறுத்தாமல், பஸ் ஸ்டாண்டின் உள்ளே பஸ்கள் நிற்கும் இடத்தில் நிறுத்திவிட்டு நாள் கணக்கில் வெளியூர் சென்று விடுகின்றனர். மேலும் சரக்கு வாகனங்கள், தள்ளுவண்டிகள் போன்றவற்றையும் நிறுத்தி வைக்கின்றனர்.இதனால், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளதால், பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளே செல்லவும், வெளியேறவும் முடியாமல், ஓட்டுனர்களும், பயணிகளும் சிரமப்படுவதோடு, பள்ளி, கல்லுாரி மாணவிகள் மற்றும் வயதான பெரியவர்கள் பஸ்சில் ஏறவும், இறங்கி வெளியேறவும் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பல முறை பேரூராட்சியில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை