உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் சேவை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நடமாடும் வங்கி சேவைக்கான மொபைல் வாகனத்தை மாவட்ட கலெக்டர் சரயு கொடியசைத்து துவக்கி வைத்தார்.இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'கூட்டுறவு கடன் சங்கங்களின் வாடிக்கையாளர்களிடம், கடன் சேவைகள், இட்டுவைப்புகள் தொடர்பான வட்டி விளம்பரங்கள் மற்றும் நிதிசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் வங்கி சேவைக்கான மொபைல் வாகன சேவை துவங்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின், வாடிக்கையாளர்களிடம் நேரடியாக அவர்களின் வசிப்பிடத்திற்கே சென்று, வங்கியியல் சேவை மூலம் பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதர வங்கி கணக்குதாரர்களும், ஏ.டி.எம்., டெபிட் கார்டு மூலமாகவோ, பயோ மெட்ரிக் முறையிலோ பணம் எடுக்கலாம். வேறு யாருக்கும் பணமும் அனுப்பலாம். இச்சேவையால் அனைத்து தரப்பினரும் பயன்பெறலாம்' என்றனர்.தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் மலர்விழி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை