உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளக்குறுக்கியில் எருது விடும் விழா 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

கள்ளக்குறுக்கியில் எருது விடும் விழா 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

ஓசூர்:ஓசூர் அடுத்த கள்ளக்குறுக்கியில், நேற்று எருது விடும் விழா நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட காளைகளின் கொம்புகளில், பரிசு பொருள்கள் மற்றும் தடுக்குகளை கட்டப்பட்டிருந்தது. இக்காளைகள் பார்வையாளர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களையும் தடுக்குகளையும் இளைஞர்கள் அவிழ்த்து சென்றனர். இதில், 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலுார், பேரிகை, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் கிராம பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் விழாவை கண்டு ரசித்தனர்.விழா ஏற்பாடுகளை பஞ்., தலைவர் பாப்பையா, துணைத்தலைவர் விஜயகுமார், வார்டு உறுப்பினர் தேவராஜ் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை