உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி

அரூர், அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், நவீனமயப்படுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டை, கடந்தாண்டு, அக்., 24ல் அமைச்சர் நேரு திறந்து வைத்தார். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் கடைவீதிக்கு செல்லும் சாலையில், மழைநீர், குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள மழைநீர் வெளியேறும் வகையில், வடிநீர் கால்வாய்களை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை