மேலும் செய்திகள்
கண்டாச்சிபுரத்தில் ஆடிப்பூர விழா
30-Jul-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மாருதி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம், அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராம்நகரிலிருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது.தொடர்ந்து, தொழிலதிபர் மஞ்சுளா வரதராஜன் ஏற்பாட்டில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாலை, 4:30 மணிக்கு மாருதி நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, கலைஞர் நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
30-Jul-2025