உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் நிருபரின் கையை வெட்டிய மர்ம நபர்

ஓசூரில் நிருபரின் கையை வெட்டிய மர்ம நபர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உமாசங்கர் நகரில் வசிப்பவர் பசவராஜ், 48. மாதம் இருமுறை வெளியாகும் சமூக மாற்றம் என்ற பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருகிறார்; அதேபோல், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்றிரவு, 8:00 மணிக்கு ஓசூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள, தன் அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது விலாசம் கேட்பது போல் அலுவலகத்திற்குள் வந்த மர்ம நபர், சற்றும் எதிர்பாராத நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, பசவராஜின் இடது கையை வெட்டி விட்டு தப்பியோடினார். பலத்த காயமடைந்த பசவராஜின், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அவரை ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, ரியல் எஸ்டேட் தொழில் பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரிப்பதுடன், மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி