உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பஞ்., ஆபீசில் உட்கார கூடாது: மிரட்டல் விடுத்த துணைத்தலைவர் மீது புகார்

பஞ்., ஆபீசில் உட்கார கூடாது: மிரட்டல் விடுத்த துணைத்தலைவர் மீது புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி பஞ்., தலைவர் சரசு, நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: நான் தாதம்பட்டி பஞ்., தலைவராக உள்ளேன். இந்த பஞ்.,ன் 6வது வார்டு உறுப்பினரும் பஞ்., துணைத்தலைவருமான ரங்கதுரை, என்னை எப்போதும் தரக்குறைவாக நடத்தி வருகிறார். ஊராட்சி அலுவலகத்தில் நேற்று வரவு செலவு கணக்குகளை சரிபார்த்தபோது, அங்கு வந்த ரங்கதுரை, 'நீ என் முன்னால் நாற்காலியில் அமர்கிறாயா' எனக்கூறி திட்டினார். தொடர்ந்து என்னை பணி செய்ய விடாமல் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். திட்டப்பணிகளுக்கு, எனக்கு முதலில் கமிஷன் கொடுத்த பின்தான், எந்த பணிகளையும் செய்ய வேண்டும் எனக்கூறி மிரட்டுகிறார். விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை