உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தேர்தல் நடத்தை விதிமுறைகளால் போச்சம்பள்ளி வாரச்சந்தை வர்த்தகம் பாதிப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் போச்சம்பள்ளி வாரச்சந்தை வர்த்தகம் பாதிப்பு

போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தின், 2வது பெரிய வாரச்சந்தை. இங்கு ஆடு, மாடு மற்றும் அனைத்து வகையான தானியங்கள், பயறு வகைகள், பாரம்பரிய உணவு பொருட்கள் கிடைக்கும். வாரச்சந்தையில், 3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கும். அதேபோல் பண்டிகை காலங்களில், 7 கோடி முதல், 10 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும்.அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும், அதேபோல் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் தானியங்களை மொத்த கொள்முதல் செய்யவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்கவும் வருவது வழக்கம். தற்போது, லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், வியாபாரிகள் கால்நடைகள், உணவு பொருட்களை வாங்க, பணத்தை கையில் எடுத்து வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதனால், போச்சம்பள்ளி வாரச்சந்தையில், வியாபாரிகள் வராமல், வியாபாரமின்றி வாரச்சந்தை வெறுமனே காட்சியளித்தது.கால்நடைகள், உணவு தானிய பொருட்களை கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரமின்றி அவற்றை திரும்ப எடுத்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை