உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

ஓட்டு எண்ணும் மைய பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில், ஓட்டு எண்ணும் மைய பகுதியில், 'ட்ரோன்'கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டுப்பதிவு முடிந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரும், ஜூன் 5- வரை, 'ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்பகுதிகளில் எவ்வித 'ட்ரோன்'களும் பறக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ