| ADDED : டிச 04, 2025 07:17 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பகல் நேர பராமரிப்பு மையம் செயல்படுகிறது. இங்கு, டைட்டன் இன்ஜினியரிங் அன்ட் ஆட்டோமேஷன் (டீல்) நிறுவனம் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, அன்னையா, ராஜூ, பையாஸ் முன்னிலை வகித்தனர். விழாவில், மாற்றுத்திறனாளிக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டது.ஓசூர் மாநகர மேயர் சத்யா, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர், 25க்கும் மேற்பட்டோருக்கு உபகரணங்களை வழங்கினார்.மாணவ, மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டீல் நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி பிரபு மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோதீஸ்வரர் ரெட்டி, ஆர்.வி.,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை வளர்மதி, டீல் சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் தமிழ்மொழி, ஆகாஷ், ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் குமரவேல் செய்திருந்தார்.