உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேருக்கு காப்பு

ஓடும் பஸ்சில் மொபைல் திருடிய 2 பேருக்கு காப்பு

ஓசூர், திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த சிவசங்கர், 35. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி ஆனந்த் நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம், 16ம் தேதி, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியிலிருந்து ஓசூருக்கு, 6ம் நம்பர் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது பாக்கெட்டிலிருந்த, 15,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போனை, ஓசூர் தர்கா பஸ் ஸ்டாப் அருகே வைத்து, மர்ம நபர்கள் திருடினர். சிவசங்கர் புகார் படி, சிப்காட் போலீசார் விசாரித்தனர்.இதில், கர்நாடகா மாநிலம், பெங்களூரு மைசூரு சாலையிலுள்ள கஸ்துாரிபாய் நகரை சேர்ந்த தங்கராஜ், 30, வால்மீகி நகரை சேர்ந்த செல்வா, 25, ஆகியோர், மொபைல்போனை திருடியது தெரிந்தது. அவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை