உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர் சங்கம் ஆர்ப்பாட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி,நில அளவையர் சங்கதினர், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். கோட்ட தலைவர் மாவீரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மோகன் கோரிக்கை விளக்கி பேசினார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் குமரேசன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்களின் நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டை குறைக்க வேண்டும். 2025ல் பதவி உயர்வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால், பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நிலஅளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள், அறிவிக்காமல் உள்ளதால், நிலஅளவர்கள் காலிப்பணிடம் நிரப்பாமல் உள்ளது.எனவே, உடனே நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை