உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுவாசினி, கன்னியா பூஜை

சுவாசினி, கன்னியா பூஜை

ஓசூர், : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் தாம்ப்ராஸ் சார்பில், உலக மக்கள் நன்மைக்காக, சுவாசினி மற்றும் கன்னியா பூஜை நடந்தது. 120 சுமங்கலி பெண்கள் மற்றும் 12 கன்னியா இளம்பெண்களுக்கு மாலை அணிவித்து, அவர்களது பாதங்களில் நலங்கிட்டு, மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து, துாபம் மற்றும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, புத்தாடைகளுடன் வளையல், திருமாங்கல்ய சரடு, குங்குமம், மஞ்சள் ஆகிய மங்கல பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன.தமிழ்நாடு பிராமணர் சங்க, ஓசூர் கிளை தலைவர் நாகராஜன் மற்றும் ஸ்ரீ அக்ரஹாரம் அமைப்பின் நிறுவனர் வாசன் அய்யர் உட்பட பலர், சுமங்கலிகளை வணங்கினர். நிகழ்ச்சியில், பண்டைய காலங்களில், பிராமணர் சமூக குடும்பங்களில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய பாத்திரங்கள் மற்றும் அரிய பொருட்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தன


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை