உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கொடி நாள் தினத்தையொட்டி ரூ.1.48 கோடி வசூலிக்க இலக்கு

கொடி நாள் தினத்தையொட்டி ரூ.1.48 கோடி வசூலிக்க இலக்கு

கிருஷ்ணகிரி: கொடிநாள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், கலெக்டர் தினேஷ்குமார், கொடிநாள் நிதி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் நீத்த படைவீரர்கள் மற்றும் வீட்டை மறந்து, 24 மணி நேரமும் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், டிச., 7ல் கொடிநாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடந்த, 2024ம் ஆண்டிற்கு கொடிநாள் நிதியாக, 1.41 கோடி ரூபாய் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்-டது. மாவட்ட நிர்வாகம் முயற்சியால், இதுவரை, 1.61 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கொடிநாள் வசூல், 1.48 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, கலெக்டர் தினேஷ்குமார், முன்னாள் படைவீரர்கள், 20 பேருக்கு, 5.86 லட்சம் ரூபாய் மதிப்பில், கல்வி உதவித்தொகைக்கான காசோ-லையை வழங்கினார். ராணுவத்திற்கு மகன், மகளை அனுப்பிய, 5 பெற்றோருக்கு பணி ஊக்க மானியமாக, வெள்ளி பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை