உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மூவரை கொன்ற மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

மூவரை கொன்ற மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

ஓசூர்: கர்நாடகா மாநில எல்லையில், மூன்று பேரை கொன்ற மக்னா யானையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே, பன்னார்கட்டா தேசிய பூங்கா உள்ளது. இதை-யொட்டிய கிராம பகுதிகளில், மக்னா யானை ஒன்று நீண்ட நாட்களாக சுற்றித் திரிந்தது. அப்பகுதி விவசாய நிலங்களில் பயிர்-களை நாசம் செய்து வந்த யானை, அடுத்தடுத்து, மூன்று பேரை தாக்கி கொன்றது. இதனால் அதை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆட்-கொல்லி மக்னா யானையை பிடிக்க, கர்நாடகா மாநிலத்தின் துபாரே மற்றும் மத்திகோடு ஆகிய முகாம்-களில் இருந்து, மொத்தம் எட்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானையை, கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன், 100 க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் தேடி, அதன் நடமாட்டத்தை கண்டறிந்தனர். அதன்பின், மயக்க மருந்து நிபுணர் ரஞ்சன், மக்னா யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்-தினார். 1 கி.மீ., துாரம் சென்ற யானை, மயக்கமடைந்து கீழே சாய்ந்தது. தடிமனான கயிறுகளை வைத்து யானையை கட்டி, பீமா, மகேந்திரா ஆகிய கும்கி யானைகள் உதவியுடன், மக்னா யானையை லாரியில் ஏற்றி, பன்னார்கட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமிற்கு வனத்துறையினர் அனுப்பினர். இதனால், பன்னார்கட்டா தேசிய பூங்காவை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை