உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

கிருஷ்ணகிரி,:மாரடைப்பால் மகன் இறந்த அதிர்ச்சியில், தாயும் மாரடைப்பால் உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி நகராட்சி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சாந்தம்மாள், 80; இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு, 4 மகள்கள், 3 மகன்கள். கடைசி மகன் இன்பராஜ், 47, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.இன்பராஜிக்கு கடந்த, 3 மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். நேற்று முன் தினம் அதிகாலை, 3:00 மணிக்கு இன்பராஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், கிருஷ்ணகிரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறிது நேரத்தில் இறந்தார்.இதையறிந்த அவரது தாய் சாந்தம்மாளுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 4:00 மணிக்கு இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை