உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி

சிப்காட் வளாகத்தை துாய்மை படுத்திய நகராட்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிப்காட் வளாகத்தில் குப்பை தேங்கியும், அடிப்-படை வசதியின்றியும், திருட்டு, குடிமகன்கள் தொல்லையால் தொழில் முனைவோர் கடும் அவதியடைந்து வருவதாக குற்றச்-சாட்டு எழுந்தது. இது குறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் கிருஷ்ணகிரி சிப்காட் வளா-கத்தில் பல மாதங்களாக அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசிய குப்-பையை நேற்று நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தப்படுத்தினர். பல்வேறு மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சமூக பொறுப்போடு செய்தி வெளியிட்டு, தீர்வு கண்ட, 'காலைக்-கதிர்' நாளிதழுக்கு அப்பகுதி தொழில் முனைவோர் நன்றி தெரி-வித்தனர். அதேபோல குடிமகன்கள் தொல்லை, திருட்டு சம்பவங்-களை தடுக்க, போலீசாரும் இரவுநேர ரோந்து பணி மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி