உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி அடுத்த பில்லனகுப்பத்தை சேர்ந்தவர் மாதவன், 40, கூலித்தொழிலாளி; ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில், தமிழ்நாடு ஓட்டல் அருகே, ஹீரோ பைக்கில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த மாதவனை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை