உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கூடுதல் பஸ் வசதி இல்லை: வெளிமாவட்ட மக்கள் அவதி

கூடுதல் பஸ் வசதி இல்லை: வெளிமாவட்ட மக்கள் அவதி

கிருஷ்ணகிரி : இன்று நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ய, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும், வெளியூரை சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, நேற்று கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அங்கிருந்து அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, போதியளவு பஸ் வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரம் காத்திருந்து, பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு, தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.அதேபோல், வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேற்று வந்ததால், பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது.இது குறித்து பஸ்சிற்கு காத்திருந்த மக்கள் கூறுகையில், 'இந்த மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு, தேர்தலில் ஓட்டுப்போட செல்வார்கள் என்று தெரிந்தும், கூடுதல் பஸ் வசதியை அரசு ஏற்படுத்தவில்லை. இதனால், பெண்கள் மற்றும் குழந்தையுடன் வந்தவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முறையாக பஸ் வசதி செய்யப்பட்டிருந்தால், இந்த அவதியை தவிர்த்திருக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை