உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி

கோவில் நிலங்களில் மரக்கன்று நடும் பணி

தேன்கனிக்கோட்டை, தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பயன்பாடு இல்லாத நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள கோவில் நிலங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தேன்கனிக்கோட்டை அடுத்த ஒன்னுகுறுக்கி கிராமத்தில் உள்ள நாகமுனீஸ்வரர் கோவில் நிலத்தில் முதற்கட்டமாக, 120 தேக்கு மரங்கள் நடும் பணி நேற்று துவங்கப்பட்டுள்ளது.தேன்கனிக்கோட்டை சரக ஆய்வாளர் வேல்ராஜ் மற்றும் பரம்பரை அறங்காவலர் சிவப்பா ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மேலும், 118 மகாகனி மரங்கள் நட முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், அஞ்செட்டி துர்க்கம் மாதேஸ்வர சுவாமி கோவில் நிலத்தில், 530 மரக்கன்றுகள் நட, குழிகள் தோண்டும் பணிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை