உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் டி.வி.எஸ்., நிறுவனர் சீனிவாசன் நூற்றாண்டு விழா

ஓசூரில் டி.வி.எஸ்., நிறுவனர் சீனிவாசன் நூற்றாண்டு விழா

ஓசூர்: ஓசூர் பகுதி மக்கள் சார்பில், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனர் சீமா என்ற சீனிவாசனின் நுாற்றாண்டு விழா, ஓசூரில் நடந்தது.ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலரும், முன்னாள் காங்., எம்.எல்.ஏ.,வுமான மனோகரன் தலைமை வகித்து பேசியதாவது: ஓசூருக்கு, 1973ல், சிப்காட் கொண்டு வரப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் எம்.பி., சுப்பிரமணியம், கருணாநிதி ஆகியோர் ஆவர். 1973ல், நாடு முழுவதும், 30 ஆயிரம் மொபட்டுகள் தேவை என்ற போது, தன்னால், 60 ஆயிரம் மொபட்டுகள் உற்பத்தி செய்ய முடியும் என கூறி, மத்திய அரசிடம் அனுமதி கேட்டவர் டி.வி.எஸ்., நிறுவனர் சீனிவாசன். பால்காரன், விவசாயி என அனைவரும் பயன்படுத்தும் வகையில் டி.வி.எஸ்., மொபட் பயன்படுத்தப்படுகிறது. அதை டி.வி.எஸ்., மொபட் என்பதை விட, நம்ம வண்டி என்றே கூறலாம். இரு சக்கர வாகன உற்பத்தியில், சீனிவாசனின் நீண்ட முன்னோக்கிய பார்வை, ஓசூர் நகருக்கு பெயரை கொண்டு வந்தது.இவ்வாறு பேசினார்.மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார், தமிழியக்க வட தமிழக ஒருங்கிணைப்பாளர் வணங்காமுடி, புனித ஜான்போஸ்கோ பள்ளி தாளாளர் ஏஞ்சலா, ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் துரை, காங்., முன்னாள் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி., மாநில அமைப்பு செயலாளர் முனிராஜ், தொழிலதிபர் நரசிம்மன், சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை