உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கோவில்களில் பரணி தீபம் ஏற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு

கோவில்களில் பரணி தீபம் ஏற்றி கார்த்திகை தீபத்திருநாள் வழிபாடு

கிருஷ்ணகிரி, கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலில் 'பரணி தீபம்' ஏற்றி, கோவிலை சுற்றி உற்சவரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுப்பேட்டை ராசுவீதி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அகலில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி மலை, பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் அமைந்துள்ள, 814 ஆண்டு பழமையான காலபைரவர் கோவில் உட்பட, மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், பரணி தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகலில் விளக்கேற்றி, கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.*ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 6:00 மணிக்கு மேல், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உட்பட பக்தர்கள் பலர், கோவிலில் இருந்து விளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று, மஹா தீபத்தை ஏற்றி வைத்தனர்.* காவேரிப்பட்டணம் ஸ்ரீராமுலு நகர் பின்பகுதி பொன்னன் நகர் சாந்தன்குட்டையின் மேல் அமைந்துள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 'பரணி தீபம்' ஏற்றப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, நந்திகேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை