உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பைக்குகள் நேருக்குநேர் மோதியதில் ௨ பேர் பலி

பைக்குகள் நேருக்குநேர் மோதியதில் ௨ பேர் பலி

ஓசூர்: சூளகிரி அருகே, பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இருவர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, செம்பரசனப்பள்ளி அருகே கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ், 29, தேங்காய் வியாபாரி; சூளகிரி செல்ல கட்டிகானப்பள்ளியில் இருந்து ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டார். அனாசந்திரத்தை சேர்ந்த பெயின்டர் திம்மராஜ், 44; பீளாளம் கிராமத்திலிருந்து, வி.மாதேப்பள்ளி கிராமத்துக்கு பஜாஜ் விக்ராந்த் பைக்கில் சென்றார். சூளகிரி - கும்பளம் சாலையில் தொட்டூர் கிராமத்தில், கங்கம்மா கோவில் அருகே மாலை, 6:30 மணிக்கு வந்தபோது, இருவரின் பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தலையில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, சூளகிரி அவசர சிகிச்சை மையத்துக்கு அனுப்பினர். டாக்டர்கள் பரிசோதனையில் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை