| ADDED : ஜன 13, 2024 11:26 PM
கிருஷ்ணகிரி:தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், மாநில அளவிலான ஊடக பயிற்சி வகுப்பு நடந்தது. கிருஷ்ணகிரி, செட்டியம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:இளைஞர்கள், சமூக நீதி, சமத்துவம், திராவிடம் குறித்த சிறந்த கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும். ஏனெனில் இன்று தி.மு.க.,வினரை வலுக்கட்டாயமாக துாக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பர்கூரில் அவ்வாறு கடத்தப்பட்ட ஒரு ஒன்றிய கவுன்சிலரான லட்சுமி அண்ணாமலை மற்றும் கிளை செயலர் முனிராஜ், சக்கரவர்த்தி மற்றும் பலர் ஐந்து நாட்களுக்கு முன் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அவர்கள் தங்களின் சுயமரியாதையை இழந்து வளைந்து வணங்க முடியாமல், இன்று மீண்டும் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். மேலும், இரு ஒன்றிய கவுன்சிலர்கள் தி.மு.க.,வுக்கு திரும்ப உள்ளனர். விரைவில் அனைவரும் வருவர். தி.மு.க.,வின் சுயமரியாதை கொள்கையை பரப்பும் வேலைகளில், தி.மு.க., இளைஞரணி, தொழில்நுட்ப அணியினர் ஈடுபட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.