உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.15 கோடியில் தர்மபுரி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி

ரூ.15 கோடியில் தர்மபுரி ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி

தர்மபுரி : ''தர்மபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த, மத்திய அரசு அம்ருத் பாரத் திட்டத்தின் மூலம், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.தர்மபுரி ரயில் நிலையத்தை பார்வையிட்ட பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி ரயில் நிலையத்தில், 2004ம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்கு பின் பெரிய அளவில் நவீனப்படுத்தப்படவில்லை. தற்போது, மத்திய அரசு அம்ருத் பாரத் திட்டத்தில், 15 கோடி ரூபாயை, தர்மபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. அம்ருத் பாரத் திட்டத்தில், ரயில் நிலையம் அருகில், 400 பைக், 50 கார் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்தும் இடம், கான்கிரீட் தரைப்பாலம், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், குடிநீர் வசதி, நவீன கழிப்பிடம், தானியங்கி நடைமேடை, நவீன அறிவிப்பு பலகை உள்ளிட்டவை தர்மபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த வளர்ச்சி பணிகளால், தர்மபுரி ரயில் நிலையம் புது பொலிவு பெறும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை