உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வி.ஏ.ஓ., அலுவலகம் முன் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் முன் வாகனங்கள் ஆக்கிரமிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பேரூராட்சி மைய பகுதியில், வி.ஏ.ஓ., அலுவலகம் உள்-ளது. இங்கு, பேரூராட்சிக்கு உட்பட்ட புது ரெட்டியூர், திண்டா-லானுார், வீரகானுார் உள்ளிட்ட, 15 வார்டு மக்கள், தங்களின் பட்டா, சிட்டா, உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள், அலுவலகம் செல்ல வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அரூர் மெயின் ரோட்டிலிருந்து அலுவலகம் செல்ல வழியி-ருந்தும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் செல்ல முடிவ-தில்லை. தர்மபுரி, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்வோர் தங்கள் பைக்-குகளை வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு நிறுத்தி விட்டு, மாலையில் தான் எடுத்து செல்கின்றனர். வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு ஆக்கிர-மித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் நடைபாதை, சாலை-யோர கடைகளால், மக்கள் வி.ஏ.ஓ., அலுவலகம் செல்ல முடி-யாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் எளி-தாக வி.ஏ.ஓ., அலுவலகம் சென்று வர, மாவட்ட நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை