உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வார்டுதோறும் கால்வாய் துார்வாரும் திட்டம் தோல்வி; சாலையில் பெருக்கெடுக்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

வார்டுதோறும் கால்வாய் துார்வாரும் திட்டம் தோல்வி; சாலையில் பெருக்கெடுக்கும் கழிவு நீரால் மக்கள் அவதி

ஓசூர்: ஓசூரில், வார்டுதோறும் சாக்கடை கால்வாய் துார்வாரும் திட்டம் தோல்வியடைந்ததால், சாலையில் கழிவுநீர் பெருக்கெடுக்க துவங்கி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின், 45 வார்டுகளிலுள்ள சாக்கடை கால்வாய்கள், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளன. அதனால், பல இடங்களில் கழிவுநீர் நிரம்பி துர்நாற்றத்துடன், சாலையில் பெருக்கெடுத்து ஓட துவங்கியுள்ளது. இதனால் கடந்த செப்., மாதம் ஒரு திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி, தினமும், 2 அல்லது 3 வார்டுகளில், மாநகராட்சி நிரந்தர துாய்மை பணியாளர்கள் தலா, 30 பேர் மற்றும் பொக்லைன், டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது.மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும், 30க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளதுடன், வீடுகளின் முன்புள்ள சாக்கடை கால்வாய்களை வீட்டின் உரிமையாளர்கள் சிலாப் போட்டு மூடி வைத்துள்ளனர். அதனால், கால்வாய் துார்வாரும் பணி, சவால் நிறைந்ததாக இருந்ததால், அனைத்து வார்டுகளிலும், கால்வாய்களை துார்வாரும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் திறன்பட மேற்கொள்ள முடியாமல் கைவிட்டது. அதனால், மாநகராட்சிக்குள் உள்ள சாக்கடை கால்வாய்கள் தற்போது நிரம்பி, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.குறிப்பாக, ஓசூர் தாலுகா அலுவலக சாலையில், நேதாஜி ரோடு சந்திக்கும் இடத்தில், நேற்று கால்வாயில் கழிவுநீர் நிரம்பி சாலையில் பெருக்கெடுத்தது. அதனால், சாலையோரம் உள்ள கடைகளில் உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். அதேபோல், ஓசூர் ஏரித்தெரு சாலையோரமுள்ள சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல், கழிவுகள் நிரம்பி அடைத்துள்ளது. இதுபோன்று நகரின் பல இடங்களில், சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை