உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காஞ்சி மடத்தில் அனுஷ விழா

காஞ்சி மடத்தில் அனுஷ விழா

மதுரை : காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் காஞ்சி மகா பெரியவரின் மாதாந்திர அனுஷ நட்சத்திர விழா நடந்தது. மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மகா பெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம் அலங்காரம் செய்யப்பட்டது. குருமகிமை என்ற தலைப்பில் இந்திரா செளந்தர்ராஜன் சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை பொருளாளர் ரமணி, ஸ்ரீகுமார், ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.காஞ்சி காமகோடி மடம் சோழவந்தான் அக்ரஹாரம் ஸ்ரீ மலையாளம் கிருஷ்ணய்யர் பாடசாலையில் நடந்த அனுஷ விழாவிற்கு ஸ்ரீ குமார் தலைமை வகித்தார். வேதபாராயணம் நடந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் முள்ளிப்பள்ளம் கிளையிலும் அனுஷ விழா நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை