உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூலை 30 திருமங்கலத்தில் பந்த்

ஜூலை 30 திருமங்கலத்தில் பந்த்

திருமங்கலம் : கப்பலுாரில் விதிமீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும், டோல்கேட்டை அகற்றவும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று மாலை டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினரிடம் திருமங்கலம் டி.எஸ்.பி., அருள் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. இன்று(ஜூலை 26) ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் டோல்கேட்டை இடமாற்றம் செய்வதே எங்கள் நோக்கம். அதனால் திட்டமிட்டபடி ஜூலை 30ல் பந்த் மற்றும் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி