உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதைப்பொருள் விழிப்புணர்வு

போதைப்பொருள் விழிப்புணர்வு

மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி, விரிவாக்கத் திட்டங்களின் அறிமுக விழா முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது.பல்வேறு விரிவாக்கத் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புத்தகம் படிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மனித வாழ்வில் அதன் தாக்கம் குறித்தும் பேராசிரியை நாச்சியார் விளக்கினார். 1190 மாணவிகள், 50 பேராசிரியர்கள் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பேராசிரியைகள் சுஜாதா, லட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை