| ADDED : ஆக 16, 2024 04:30 AM
அலங்காநல்லுார்: ''ஹிந்தி ஒழிக என்று கூறிய கருணாநிதியின் படம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி மொழியுள்ளது. எனவே, தி.மு.க.,வின் ஹிந்தி ஒழிப்பு போராட்டம் பச்சை பொய் என்பது தெரிய வந்துள்ளது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அலங்காநல்லுார் முடுவார்பட்டியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், மாணிக்கம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது : தந்தைக்குப் பின் மகன், பேரன் என கம்பெனியில் வரலாம். கட்சியில் வருவதால் தி.மு.க.,வில் எங்கே ஜனநாயகம் உள்ளது.மத்திய அரசு கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறது.முதல்வர் ஸ்டாலின் போன் செய்து அனைவரையும் அழைக்கிறார். அரசியல் நாகரீகம் கருதி நானும் கலந்து கொள்வேன் என கூறுகிறார் அண்ணாமலை. இப்போது பூனைக் குட்டி வெளியே வந்த கதையாக இவர்களது உறவு வெளிவந்துள்ளது.தந்தையின் விளம்பரத்திற்கு ஹிந்தி மொழி என்ன, சமஸ்கிருதம், ஜப்பான், ரஷ்யா என எந்த மொழியில் வந்தாலும் அதை வெளியிட முதல்வர் தயாராக உள்ளார். ஹிந்தி ஒழிக என்று கூறிவிட்டு, இன்று நாணயத்தின் மூலம் ஹிந்தி உள்ளே வந்து விட்டது. இவர்களது ஹிந்தி ஒழிப்பு போராட்டம் பச்சை பொய் என்பது மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.