உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின் கம்பம் இங்கே; டிரான்ஸ்பார்மர் எங்கே குமுறும் நாவினிபட்டி விவசாயிகள்

மின் கம்பம் இங்கே; டிரான்ஸ்பார்மர் எங்கே குமுறும் நாவினிபட்டி விவசாயிகள்

மேலுார் : நாவினிபட்டியில் புதிதாக அமைத்த ஏழே நாட்களில் கழற்றிச் சென்ற மின்சார டிரான்ஸ்பார்மரை, ஆறு மாதமாகியும் பொருத்தாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.நாவினிபட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து கிராமத்தின் ஒரு பகுதி வீடுகள், விவசாய பயன்பாட்டுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்புகள் அதிகமானதால் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. பற்றாக்குறை மின்சாரத்தினால் மின்அழுத்தம் வேறுபாடு ஏற்பட்டு, மோட்டார், வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் அடிக்கடி பழுதானது. இது குறித்து கீழையூர் மின்வாரிய அதிகாரிகளிடம் மக்கள் புகார் கூறினர். எனவே அப்பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ, ஏழே நாட்களில் யாரிடமும் கூறாமல் கழற்றிச் சென்றனர்.விவசாயி லெட்சுமணன்: புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்ததால் இப்பகுதியில் வாழை, கரும்பு, தென்னை பயிரிட்டோம். ஏழே நாட்களில் பழுதானதாகக் கூறி டிரான்ஸ்பார்மரை கழற்றினர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே பழுதை நீக்கி கொண்டு வருவதாக கூறி சென்ற அதிகாரிகள் ஆறு மாதமாகியும் கொண்டு வரவில்லை. மீண்டும் பழைய டிரான்ஸ்பார்மரிலேயே இணைப்பு கொடுத்துள்ளனர். ஆறு மாதங்களாக விவசாயம் பாதித்து நிலங்கள் தரிசாக கிடக்கிறது. அதிகாரிகள் புதிய டிராஸ்பார்மரை கொண்டு வர வேண்டும் என்றார்.மின்வாரியத் துறையினர் கூறுகையில், இரண்டு நாட்களில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ