| ADDED : ஜூன் 05, 2024 01:17 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்.பி., மீண்டும் வெற்றி பெற்றார். முன்னாள்முதல்வர் பன்னீர் செல்வத்தை 1 லட்சத்து66 ஆயிரத்து 782 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ராமநாதபும் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் நவாஸ்கனி எம்.பி., பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் சுயேச்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க., வேட்பாளராக ஜெய பெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரபா மற்றும் சுயேச்சைகள் என 25 பேர் போட்டியிட்டனர்.ஆரம்பம் முதலே நவாஸ்கனி அதிக ஓட்டுகள்வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். 27 சுற்றுகள் முடிவில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் நவாஸ்கனி 2974 தபால் ஓட்டுகளுடன் 5 லட்சத்து 9664 ஓட்டுகள் பெற்றார். அதற்கு அடுத்தபடியாக பன்னீர்செல்வம் 2104 தபால் ஓட்டுகள் உட்பட 3 லட்சத்து 42 ஆயிரத்து 882 ஓட்டுகள் பெற்றார். இவர்களை தவிர அ.தி.மு.க.,-நாம் தமிழர் வேட்பாளர், சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.நவாஸ்கனி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் ஜெய பெருமாள் மூன்றாம் இடம் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் சந்திரா பிரபா நான்காம் இடம் பெற்றார். நோட்டாவுக்கு 6295 ஓட்டுகள் கிடைத்தன.