| ADDED : ஆக 13, 2024 05:54 AM
வாடிப்பட்டி : கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியும் நடிகர்கள்தான் என்பதால் அமைச்சர் அன்பரசன் அவர்களைத்தான் விமர்சித்துள்ளார்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசினார்.பரவை பேரூராட்சியில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு வழங்கும் விழா நடந்தது. நகரச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கலாமீனா வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் செல்லுரர் ராஜு பேசியதாவது: தி.மு.க., சின்னம், கொடியை தமிழகம் முழுவதும் தனது படங்கள் மூலம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர்., அதனால்தான் இன்று வரை தி.மு.க.,வினர் பதவியை அனுபவிக்கின்றனர். எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவை நடிகர் என விமர்சிக்க அமைச்சர் அன்பரசனுக்கு என்ன தகுதி உள்ளது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியும் நடிகர்கள்தான். அவர்களைத்தான் அன்பரசன் விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் சாதனைகள், கொண்டு வந்த திட்டங்கள் என்னவென்று அன்பரசனால் கூற முடியுமா. கருணாநிதி பெயரில் நுாலகம், மைதானம் திறந்தால் போதுமா. எட்டாவது படிக்கும் பள்ளி சிறுவன் கையில் கஞ்சா உள்ளது.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரைப் போன்றவர்களால் லோக்சபாவில் மெஜாரிட்டியாக இருந்த பா.ஜ., மைனாரிட்டியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.