மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
1 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
1 hour(s) ago
மதுரை: ''கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் 50 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கினால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்'' என மதுரையில் வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆண்டுதோறும் பல்வேறு திறன்களை கொண்ட புதிதாக வேலை தேடுவோர் ஒரு கோடிக்கு மேல் உருவாகின்றனர். ஏற்கனவே வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கையும் அதிகம். ஜி.எஸ்.டி. வரி முறையை அறிமுகப்படுத்திய பின் கடந்த ஏழு ஆண்டுகளாக வரி செலுத்துதலில் பெரும் குழப்பம் நிலவுகிறது. கொரோனா பெருந்தொற்று, கூடுதல் வரிச்சுமையால் நாட்டில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வேலை வாய்ப்புகள் நிறைந்த பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். சாலை, ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்வழிச்சாலைகள், வேளாண்மைக்கான நீர் நிலைகளை மேம்படுத்துதல் ஆகிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கினால் பெருமளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். கட்டமைப்புகள் முடியும் போது தொழில், வணிகம், வேளாண்மை, ஏற்றுமதி மற்றும் சுற்றுலா வளர்ச்சியும் மேம்படும் என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago