உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிப்பை அகற்ற கெடு முடிந்தும் மறுப்பு

ஆக்கிரமிப்பை அகற்ற கெடு முடிந்தும் மறுப்பு

மதுரை: மதுரை குலமங்கலம் ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி கெடு விதித்தும் அகற்றாமல் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.மதுரை குலமங்கலம் ரோட்டில் மணவாள நகர் பகுதியில் 50 அடி ரோடு வரை ஆக்கிரமிப்பு இருந்தது. இதில் வீடுகள், தொழில் நிறுவனங்கள் அடங்கும். இவற்றை அகற்றும்படி மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன்பின்னும் அகற்றாததால், ஒரு வாரத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர்.இயந்திரங்களால் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். ஆக்கிரமிப்பு வீடுகளைச் சேர்ந்த சிலர் தாங்களே இடித்து அகற்றி விடுவதாகவும், ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர். மாநகராட்சி அதிகாரிகள் இடிபாடுகளை நிறுத்தி விட்டுச் சென்றனர்.சொன்னபடி மறுநாளே சிலர் வீடுகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடித்து அகற்றினர். ஆனால் இன்று வரை சிலர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றவும் முயற்சிக்கவில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ