மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
1 hour(s) ago
பெட்ரோல், டீசல் விற்பனை வரியை குறிப்பிட வழக்கு
2 hour(s) ago
மதுரை- சினிமா- 08.10
2 hour(s) ago
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
17 hour(s) ago
மவுன மொழி நடிப்பு திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை காம்கேப்ஸ் சங்கம் சார்பில் சுவரொட்டி தயாரித்தல், மவுன மொழி நடிப்பு போட்டி நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி நாகஜோதி வரவேற்றார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள், வணிகவியல் மற்றும் கணினி தொடர்பான சுவரொட்டிகள் தயாரித்து காட்சிப்படுத்தினர். சமூக ஊடகம், தலைமைத்துவம், சைபர் கிரைம், காப்பீடு உள்ளிட்ட தலைப்புகளில் மவுன மொழி நடிப்பிலும் மாணவர்கள் பங்கேற்றனர். மாணவி தீபிகா நன்றி கூறினார். துறைத் தலைவர் நாகசுவாதி ஏற்பாடு செய்தார். உதவிப் பேராசிரியர்கள் இளம்பிறை, சுப்ரமணிய ராஜா, பிரெடி பிளசன் ஒருங்கிணைத்தனர்.தொடக்க விழா மதுரை: சேதுபதி பள்ளியில் நுகர்வோர் மன்ற தொடக்க விழா நடந்தது. நுகர்வோர் பாதுகாப்பு, விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை மாநில தலைவர் ஜெயபாலன் விளக்கினார். முதுகலை தமிழாசிரியர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் திருவேங்கடத்தான் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்ற ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் செய்திருந்தார்.ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சிமதுரை: விவேகானந்த கல்லுாரி அகத்தர உறுதி மையத்தின் 'இந்திய ஞானத் திட்டம்' ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. செயலர் சுவாமி வேதானந்த, அத்யாத்மானந்த பங்கேற்றனர். முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைமுதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். முன்னாள் துணை முதல்வர் இளங்கோ பேசினார். மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு நன்றி கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
17 hour(s) ago