உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தமிழக, கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டளிக்க வாய்ப்பு மறுப்பு

தமிழக, கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டளிக்க வாய்ப்பு மறுப்பு

மதுரை : 'தமிழகம், கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டு செலுத்தும் முறையை தேர்தல் ஆணையம்' மறுத்துள்ளதால் ஊழியர்கள் சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என முன்னாள் ரயில் ஓட்டுநரும் ரயில்வே ஊழியருமான ராம்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:2021 க்கு முன்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் தபால் ஓட்டு வழங்கும் பழக்கம் இருந்தது. 2021 ல் ரயில்வே தொழிலாளிக்கு என்முயற்சியில் தபால் ஓட்டு பெற்றுக் கொடுத்தேன்.அதன்படி ஜனவரியில் தேர்தல் ஆணையம் ரயில்வேயில் அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் ஓட்டு வழங்க உத்தரவிட்டிருந்தது. வரும் லோக்சபா தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் மார்ச் 19ல் வெளியிட்ட அறிவிப்பில் தமிழக, கேரள ரயில்வே ஊழியர்களுக்கு தபால் ஓட்டுரிமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் ரயிலை சார்ந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது ஓட்டை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கை ரயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் தபால் ஓட்டு செலுத்துகின்றனர். மெட்ரோ ரயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டுரிமை உள்ள நிலையில், தமிழக, கேரள ரயில்வே ஊழியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை