உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல்

அழகர்கோவிலில் போக்குவரத்து நெரிசல்

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர்.ஆடி ஞாயிறு விடுமுறை நாளான நேற்று அழகர்மலையில் உள்ள நுாபுர கங்கையில் தீர்த்தமாடி ராக்காயி அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நுாபுர கங்கைக்குச் செல்லும் வாகனங்களை எந்த கட்டுப்பாடுமின்றி அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் அனுமதித்ததால் மலையடிவாரத்தில் இருந்து மேலே செல்ல முடியாமலும், மலையிலிருந்து கீழே இறங்க முடியாமலும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயில் வளாகத்திற்கு வெளியேயும் பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், 'கோயில் நிர்வாகமும் போக்குவரத்துப் போலீசாரும் மலைக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்தை சரிவர ஒருங்கிணைக்காததால் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாகனங்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை