உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காளான் வளர்ப்பில் கிராமத்துப் பெண்கள்

காளான் வளர்ப்பில் கிராமத்துப் பெண்கள்

மதுரை: உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனுார் சுயஉதவி குழு பெண்கள் சிப்பிக் காளான் வளர்ப்பில் அசத்துகின்றனர்.நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன் கூறியதாவது: எல்.இ.டி.பி., திட்டத்தில் பெண் தொழில்முனைவோர் உருவாக்க, மாஸ்டர் டிரஸ்ட் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் ஏற்பாட்டில் 10 பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி அளித்தோம். இவர்கள் மூலம் மேலும் 50 பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். வங்கிக்கடனுக்கு வழிகாட்டி, சந்தைப்படுத்தவும் உதவுகிறோம். சிறிய இடத்தில் குடில் அமைத்து காளான் உற்பத்தி செய்வதால் கிராமப் பொருளாதாரம் உயரும் என்றார்.குன்னுாத்துபட்டி கவிதா கூறியதாவது: தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தேன். குழந்தைப் பெற்ற பின் வீட்டில் இருந்த நேரத்தில் காளான் வளர்ப்பை கற்றேன். கொஞ்சம் முயற்சி, சரியான பயிற்சி, திட்டமிடல் இருந்தால் சுயதொழில் செய்து முன்னேறலாம். காளான் படுக்கை தயாரித்த 22வது நாளில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 10 நாள் இடைவெளியில் 2, 3ம் அறுவடையும் கிடைத்தது. ஒரு படுக்கையில் ஒரு கிலோ கிடைக்கிறது. 100 கிராம் ரூ.50க்கு விற்றாலும் உற்பத்திச் செலவு போக லாபம் நிற்கிறது. இதை பெரியஅளவில் குழுப்பெண்களுடன் சேர்ந்து தொடங்க உள்ளேன் என்றார்.பவித்ரா கூறுகையில்,''லேப் டெக்னீசியன் படித்துள்ளேன். குழந்தை பிறந்த பின் வீட்டில் இருக்கிறேன். காளான் வளர்ப்பு எளிமையாக இருக்கிறது. குழந்தையைப் கவனித்துக் கொண்டே தொழில் செய்ய முடியும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை