உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது

ரூ.ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் கைது

மதுரை : மதுரையில் கால்வாயில் கட்டுமான பணிக்கு ஒப்புதல் வழங்க ரூ. ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த சபீர் காசிம் 32, ஏற்றுமதி தொழில் செய்கிறார். தபால்தந்திநகரில் இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் நடுவில் நாகனாகுளம் கால்வாய் செல்கிறது. தங்களது இடத்தில் கட்டுமான பணியை தொடங்க ஒப்புதல் கேட்டு நீர்வளத்துறை பாசன உதவி பொறியாளர் மாயகிருஷ்ணன் 47, ஆய்வாளர் தியாகராஜனை அணுகினார். அவர்கள் ஒப்புதல் தர ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டனர். பின் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.ஒரு லட்சம் முன்பணம் கேட்டனர்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் சபீர் காசிம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரையின்படி நேற்று மாலை தல்லாகுளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாயகிருஷ்ணன், தியாகராஜனிடம் ரூ. ஒரு லட்சம் லஞ்சத்தை சபீர் காசிம் வழங்கினார். அதை பெற்ற இருவரையும் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் பாரதி ப்ரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venkatakrishna
மே 02, 2024 12:46

எத்தனை அடிபட்டாலும் திருந்தமாட்டீங்களாயா


manokaransubbia coimbatore
மே 01, 2024 16:54

உச்ச நீதிமன்றம் வரை செல்லுங்கள் நிச்சயமாக பதவி உயர்வுடன் உங்கள் வேலை நிச்சயம் மந்திரிக்கு ஒரு நியாயம் அரசு ஊழியனுக்கு ஒரு நியாயமா சம நீதி சமூக நீதி நிலை நாட்டுங்கள்


sugumar s
மே 01, 2024 15:52

small amounts will be found out immediately and arrested big amounts like s of crores will go unnoticed வாழ்க


saravan
மே 01, 2024 13:53

லஞ்சம் இல்லாத அரசு அலுவலகம் இல்லை


K.n. Dhasarathan
மே 01, 2024 12:23

தூக்கில் போடுங்கள் ஒருவரைப்போட்டாள் லஞ்சம் வாங்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் சுளுக்கு எடுத்தாற்போல இருக்கும், நீதித்துறை தான் முடிவு செய்யணும், தண்டனை கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் அரபு நாடுகளில் குற்றங்கள் குறைவு, இப்படித்தான் நாடு ஒழுக்கமாக இருக்க நீதித்துறை கடுமையாக இருக்கணும்


Indhuindian
மே 01, 2024 10:04

தண்ணியே இல்ல காஞ்சி போயிருக்கு ஆனா நீர்வளத்துறைக்கு மட்டும் கொட்டோ கொட்டோன்னு கொட்டுது தண்ணீர் மாஷை இல்லை பண மஷாய்


Raghavan
மே 01, 2024 09:57

இதுதான் திராவிடிய மாடல் அரசு மந்திரிகள் எல்லாரும் வாங்கும்போது நாம் ஏன் வாங்கக்கூடாது என்ற எண்ணம் தான் இவர்களுக்கு இந்த வழக்கு இழுக்கும் ஒரு அல்லது வருடங்கள்


சமீபத்திய செய்தி