உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒத்தக்கடை குறுவட்ட கால்பந்து போட்டி

ஒத்தக்கடை குறுவட்ட கால்பந்து போட்டி

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் யா.ஒத்தக்கடை குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் டி நோபிலி பள்ளியில் நடந்தது. யா.ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி போட்டிகளை நடத்தியது.ஆடவர் போட்டி முடிவுகள்: 14 வயது பிரிவில் ஒத்தக்கடை அரசுப்பள்ளி முதலிடம், நேரு வித்யாலயா இரண்டாமிடம் பெற்றன. 17 வயது பிரிவில் சாய்ராம் மெட்ரிக் பள்ளி முதலிடம், நேரு வித்யாலயா இரண்டாமிடம், 19 வயது பிரிவில் சாய்ராம் பள்ளி முதலிடம், ஒத்தக்கடை அரசுப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.மகளிர் பிரிவு: 14 வயது போட்டியில் பொன்முடியார் மாநகராட்சி பள்ளி முதலிடம், மாங்குளம் அரசுப் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 17 வயது போட்டியில் ஒத்தக்கடை அரசுப் பள்ளி முதலிடம், பொன்முடியார் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 19 வயது போட்டியில் பொன்முடியார் பள்ளி முதலிடம், கேட்டி வில்காக்ஸ் பள்ளி இரண்டாமிடம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை