உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

9 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

திருமங்கலம்: விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, பறக்கும் படை என ஒவ்வொரு பிரிவிலும் மூன்று குழுக்கள் என 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் பறக்கும் படையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்திரசாமி, தாசில்தார்கள் ரத்தினவேல், ராஜேந்திரன் தலைமையில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலை கண்காணிப்பு குழுவில் வேளாண் அலுவலர் சரவணகுமார், உள்ளாட்சி தணிக்கை துறை அலுவலர் ஈஸ்வர ராஜா, உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி தலைமையில் மூன்று குழுக்களும், உள்ளாட்சி மற்றும் தணிக்கை துறை அலுவலர் சந்திரமோகன் தலைமையில் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு குழுக்கள் இன்று (மார்ச் 17) அமைக்கப்படும்.311 ஓட்டுச் சாவடிகளின் நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்களின் தேர்தல் பணி ஆய்வு கூட்டம் ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது. ஆதிதிராவிட நல அலுவலர் செலின் கலைச்செல்வி, தாசில்தார் மனேஷ் குமார், வருவாய் ஆய்வாளர்கள் அசோக்குமார் சந்திரலேகா கவுசல்யா, நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி