உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முதல்வரின் வருகை பா.ஜ.,வினர் முடக்கம்

 முதல்வரின் வருகை பா.ஜ.,வினர் முடக்கம்

மதுரை: தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகையின் போது முக்கிய நிர்வாகிகளை போலீசார் 'முடக்கி' வைத்திருந்ததாக பா.ஜ.,வினர் புலம்பினர். முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவரது வருகையையொட்டி பா;ஜ.,வினர் சிலரை போலீசார் மேலமடை சந்திப்பு பகுதியில் ஒரு தெருவில் நிறுத்தி வைத்திருந்தனர். நகர் தலைவர் மாரிசக்ரவர்த்தி, பொதுச் செயலாளர் டி.எம்.பாலகிருஷ்ணன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஆதித்யசேதுபதி, மாவட்ட தலைவர் அருண்பாண்டியன் கே.கே.நகர் பகுதியில் சில போலீசாருடன் சந்துப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். இதுபற்றி சந்துப்பகுதியில் நின்றிருந்த பா.ஜ.,வினரிடம் கேட்டபோது, 'முதல்வருக்கு பா.ஜ., கறுப்புக் கொடி காட்டப் போவதாக வந்த தகவலையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மணி நேரமாக எங்களை இங்கு நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகின்றனர். மதுரை கிழக்கு தொகுதியில் கல்வாரி தியாகராஜனையும் இதுபோல செய்துள்ளனர்'' என்றனர். பின்னர் மேம்பால நிகழ்ச்சி முடிந்து முதல்வர் சென்ற பின் அவர்களை விடுவித்ததாக பா.ஜ.,வினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை