| ADDED : நவ 22, 2025 04:35 AM
மதுரை: மதுரையில் மக்கள் தொகையை காரணம் காட்டி மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நகர், வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவைத்தலைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., வெங்கடேசன், நிர்வாகிகள் ஜெயராம், சோமசுந்தரபாண்டியன், முருகானந்தம், சரவணன், முகேஷ் சர்மா, குழந்தைவேலு, பரமன், காங்., நகர் தலைவர் கார்த்திகேயன், மா.கம்யூ. செயலாளர் கணேசன், ம.தி.மு.க., செயலாளர் முனியசாமி, மக்கள் நீதி மய்யம் அழகர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. மேடையில் தி.மு.க., நிர்வாகிகள் ஆக்கிரமித்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.